மின்மாற்றி வாங்கியதில் ரூபாய் 400 கோடி ஊழல் : அன்புமணி..!!

தமிழக அரசு மின்மாற்றி வாங்கியதில் ரூபாய் 400 கோடி ஊழல் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்..

தமிழகத்தில் மின்மாற்றி கொள்முதலில் தமிழக அரசுக்கு ரூபாய் 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார் 2022ல் 500 கேபிஏ திறன் உடைய 800 மின்மாற்றிகள் தலா ₹ 12,49,800க்கு வாங்கப்பட்டதாகவும் அவை வெளிச்சந்தையில் ரூபாய் 7,87,311 இலையில் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் பல கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார், இதனை தொடர்ந்து தமிழக அரசின் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார் தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தராத காரணத்தை தமிழக அரசு எதிர்த்து கேட்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்குத்தொகைகளை வழங்குவதன் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் தங்களது கல்வியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார், மேலும் மின்மாற்றி வாங்கியதில் கணக்கு காட்டியதை விமர்சனம் செய்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!!

Read Previous

தீபாவளி: 5,975 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!!

Read Next

கால்நடை வளர்க்கிறீர்களா இது உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular