
நடைபயிற்சியின் போது தண்ணீர் அருந்தலாமா..?? பலருக்கும் தெரியாத உண்மை இதுதான்..!! கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்கள்..!!
இந்த நவீன காலகட்டத்தில் நடை பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் நம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு உணவு முறைகளையும் மாற்றி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு சிலருக்கு உடல் எடை கூடும் ஒரு சிலருக்கு தேவையில்லாத சர்க்கரை போன்ற நோய்கள் வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். இந்த நிலையில் நடை பயிற்சி செய்யும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா இல்லை கெட்டதா என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
சராசரியான வாழ்க்கையில் ஒரு மனிதன் தண்ணீர் அவனுடைய உடலுக்கு தேவையான அளவு அருந்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கட்டாயமாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆவது எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் உடலுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் கூட பல வியாதிகளில் இருந்து நாம் தப்பிக்கலாம். மற்றும் தண்ணீர் அருந்துவதன் மூலமாக கூட உடல் எடை குறையும். இந்நிலையில் நடை பயிற்சி செய்யும் போது தண்ணீர் பருகுவது மிகவும் நல்லது. நடைப்பயிற்சி செய்யும் போது தண்ணீர் பருகுவது உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மற்றும் படபடப்பு சோர்வு ஆகிய பிரச்சினைகளை தடுப்பதற்கு சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சியின் போது தண்ணீர் எடுத்துக் கொள்வதால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைத்து நீண்ட நேரம் நடை பயிற்சி செய்ய ஒத்துழைக்கும்.
குறிப்பு:
சாதாரண தண்ணீரை மட்டுமே பருக வேண்டும். நடைப்பயிற்சியின் போது குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.