
அசத்தலான கிச்சன் டிப்ஸ்..!! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லத்தரசிகளே..!!
ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து காட்சிய பாலில் ஊறவைத்து பிறகு சர்க்கரை பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாக இருக்கும். பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்தால் நல்ல நிலத்துடன் பூரி சுருங்காமல் நீண்ட நேரம் வரை புஸ் என்றே இருக்கும். வாழை இலையை பின்புறமாக தனல் காட்டி அதன் பிறகு உணவை பொட்டலமாக கட்டினால் இலை எவ்வளவு மடக்கினாலும் கிழியவே கிழியாது.
தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எல்லை வறுத்து பொடி செய்து கலந்தால் மனமாகவும் சுவையாகவும் இருக்கும். பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அரிசியையும் பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து களைந்து விட்டு வெண்பொங்கலோ அல்லது சர்க்கரைப் பொங்கலோ செய்தால் பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும் மற்றும் வாசனையாகவும் இருக்கும். பாகற்காய் வறுவல் செய்யும் போது காயை எண்ணெயில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு மற்றும் காரம் போட்டால் போதும் மொறுமொறுப்பு குறையாமல் சாப்பிட சாப்பிட இன்னும் வேணும் என்று கேட்கும் அளவிற்கு சுவையாக இருக்கும்.