
நமக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் யார் என்று கேட்டால் நம் கூடவே இருப்பவர்கள்தான்… புதிதாக வேறு ஒருவர் யாரும் வரமாட்டார்கள்..
முதுகில் குத்தப்பட்ட
முதல் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
‘நட்பு’என்ற பெயரில்
நாடகமாடியவர்களின்
பெயர் எழுதி இருந்தது.
இரண்டாம் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
ஆபத்திலும் அவசரத்திலும்
யாருக்கெல்லாம் உதவினேனோ
அவர்களின் பெயர்
அழகாய் எழுதி இருந்தது.
மூன்றாம் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்
யாரையெல்லாம் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் உற்ற உறவாய் மனதின்
உயரத்திற்கு உயர்த்தி
அழகு பார்த்தேனோ
அவர்களின் முகத்திரை கிழிந்து
அப்படியே தொங்கியது.
நேர்மை, உண்மை, என்று இங்கு ஏதும் இல்லை நேர்மையானவர், உண்மையானவர் என்று இங்கு எவரும் இல்லை என்று அறைந்தாற்போல் ஒவ்வொரு விடயமும் நமக்கு உணர்த்துகின்றது.
நிறைய பேருக்கு இந்த மாதிரி தான் நடக்கிறது…. சிலர் சொல்லுகிறார்கள் சிலர் சொல்லாமலே மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்கிறார்கள்.