படித்ததில் பிடித்தது: வாழ்வின் இறுதி வரை வேறு ஒரு உறவும் நம்முடன் வராது..!!

எல்லா உயிரினத்திற்கும் வாழ்க்கை துணை தேவைதான் அது வரமா சாபமா?
ஆண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று தான் திருமணம்….

வாழ்க்கை துணை என்பது சாதாரண வார்த்தை இல்லையே….
பிறந்ததிலிருந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்த ஒருவன் வாழ்வில் அடுத்த கட்டமாக தாய்க்கு அடுத்த இடத்தில் கவனித்துக் கொள்ள ஒரு உறவு உண்டு என்றால் அது தாரமாக தான் இருக்க முடியும்….

எங்கள் தாய் தந்தை அவர்கள் காலம் வரை கூட இருப்பார்கள்…,
சகோதரர்கள் அவர்களுக்கு என்று ஒரு குடும்பம் அமையும் வரை கூட இருப்பார்கள்…
இதே நமது பிள்ளைகள் அவர்களும் தமக்கென்று ஒரு வாழ்க்கை அமைத்து கொண்டு வேறு வழியில் சென்று விடுவார்கள்….

வாழ்வின் இறுதி வரை வேறு ஒரு உறவும் நம்முடன் வராது…
ஆனால் இறுதி வரை எனக்கு துணை நீ ….
உனக்கு துணை நான் என வாழும் ஒரே உறவு கணவன் மனைவியாக தான் இருக்க முடியும்…

ஆகவே திருமணம் செய்வதற்கான தகுதிகள் நம்மிடம் இருந்தால் நிச்சயம் திருமணம் செய்து வாழ்வது நலம்…
பொறுப்புதுறப்பு…:- அனைவருக்கும் ஆசைப்படும் வகையில் வாழ்க்கை அமைவதில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை….

எனவே பொருத்தமானவரை தேர்ந்தெடுத்து வருத்தமில்லாது வாழுங்கள்….

Read Previous

நாமக்கல் எஸ்பி இடம் தமிழ் புலி கட்சியினர் மனு..!!

Read Next

தாயாரின் கடையில் சடலமாக தொங்கிய மகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular