
சமீபத்துல ஒன்னு படிச்சேன்… “ஒரு பெண் திருமணமான இரண்டு வருடங்களில் எவ்வாறு நடத்தப்படுகிறாளோ அதை அவள் வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை” ன்னு…. ஆமா இது நூறு சதவீதம் உண்மை.
கல்யாணம் ங்கறது ஒரு பொண்ணுக்கு வேரோட ஒரு மரத்த பிடுங்கி வேறொரு இடத்துல நடற கதைதான்… இங்க நான் ஏன் செடின்னு சொல்லாம மரம்னு சொல்லிருக்கேன்னா.. செடி எல்லா இடத்துலயும் புடிச்சிக்கும் மரம் அப்படி இருக்காது உயிர்பிக்கற சூழ்நிலை கிடைச்சா மட்டும்தான் பிழைக்கும்
கண்டிப்பா கல்யாணமாகி அந்த ரெண்டு வருசத்துல நிறைய மாற்றங்கள் வரும், கர்பகாலம், பேறுகாலம், குழந்தை வளர்ப்புன்னு உடல்ரீதியாவும், மனரீதியாவும் நிறைய ஆதரவு தேவைப்படும்… இதெல்லாமே முற்றிலும் பழக்கமில்லாத ஒரு புது இடத்துல நடக்கும்… அப்போ நிறைய நிறைய ஆதரவு வேணும்…
இதெல்லாம் சரிவரகிடைச்சிட்டா பிரச்சினையில்ல கிடைக்காத பட்சத்துல அதுவே மனஅழுத்தமாகிடும் அதுவே கடைசில ஆறாதவடுவா மாறிடும்..
கொஞ்சநாள் முன்னாடி ஒரு செய்திவந்ததே… ஒரு மருமகள் மாமியார் மனரீதியா துன்புறுத்துதனால தன்னோட உயிரையே மாய்ச்சிக்கிட்டாங்க… அப்புறமா அவங்க மாமியாரும் குற்றத்துக்கு பயந்து இறந்துட்டாங்கன்னு… இதுவே அப்படியே சமாளிச்சி அவங்க வாழ்ந்திருந்தா என்ன நடந்திருக்கும் தெரியுமா….??
அந்த மாமியாருக்கு வயதாகும், உடல்நிலை மோசமாகும் அப்போ அந்த மருமகள் கண்டுக்கவே கண்டுக்காது, தன்னோட பழைய ஞாபகங்கள்ல அந்த மாமியார அவங்க செஞ்சத எல்லாமே திரும்ப செஞ்சி துன்புறுத்தக்கூடும்… பெரும்பாலும் இதுதான் நடந்திருக்கும்…
இங்க பெரும்பாலும் மருமகள் கொடுமை இப்படித்தான் ஆரம்பிக்கும்… வெளில தெரியறதில்ல.. புதுசா பாக்குறவங்களுக்கு அந்த மருமக கொடுமைக்காரியா தெரிவாங்க… இதையெல்லால் மீறி ஆமாம் போன்னு சகிச்சிட்டு பாத்துக்கற மருமகள்களும் ஒன்னு ரெண்டுபேர் இருக்காங்கதான்…. ஆனா மிகவும் சொற்பம்தான்
ஒன்னுமேயில்ல வீட்டுக்கு புதுசா வந்திருக்கற மருமகள தன்னோட பொண்ணா கூட பாத்துக்கவேணாம்… ஒரு பொண்ணா மதிச்சாலே போதும் அவ மகாராணியா மாறி கடைசிகாலத்துல உங்கள பாத்துப்பா……😇😇😇😇 அதுவே மகாராணியா நடத்தி பாருங்களேன்……. 👸 உங்களுக்கு தாயா மாறி நிப்பா🙏