கிராமத்து வீடுகள்…
இது மாதிரியான கிராமத்து வீடுகள் அவ்வளவு அழகு…
ஸ்கூல் லீவுக்கு பாட்டி ஊருக்கு போனாதான் இந்த சந்தோஷம்லாம் அனுபவிக்க முடியும்…
சில நேரம் மின்சாரம் து*ண்டிக்கப்படும் பொழுது சிமினி விளக்கு அல்லது மெழுகுதிரி ஏற்றி பாக்க வீடே அவ்வளவு அழகா இருக்கும் கூடவே வாசலில் நிலா வெளிச்சமும்…
இந்த திண்ணைகளுக்கு பல கதைகள் உண்டு…
ஆசையாக பாட்டி திண்ணையில் உக்கார வச்சு சோறு ஊட்டிய நினைவுகள் உண்டு…
அக்கம் பக்கம் வீட்டுல உள்ளவுங்க,
வேலையெல்லாம் முடிச்சு இங்க வந்து ஊர் கதை பேசிட்டு இருப்பாங்க…
ஊர்ல இருக்க பெரியப்பா மாமா பசங்க கூட இந்த திண்ணையில உக்காந்து விளையாடுவோம்…
குடும்பமா எல்லாரும் ஒன்னா சமைச்சி சாப்டுட்டு மொத்தமா திண்ணையில உக்காந்து அவுங்க பழையகாலங்கள பத்தி எங்களுக்கு கதையா சொல்லுவாங்க…
வீட்டுக்கு வர விருந்தாளிகள் காத்தோட்டமா இங்கையே உக்காந்திட்றோம்னு உக்காந்துப்பாங்க…
அப்படி சந்தோஷமாவே இருந்த இதே திண்ணையில சோகம் நிறைந்த கதைகளும் இருக்கு…
இதே திண்ணையில குடும்பத்தோட பிரச்சனைகள் பேசபட்டிருக்கு…
சொந்த வீட்ட விக்க வேண்டிய சூழல் வந்து விடி விடிய பாட்டி அதே திண்ணையில் இருந்து அழுத கதைகளும் உண்டு…
🥺❤️❤️




