பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை..!! எப்படி இருக்கும் தெரியுமா..??

Oplus_131072

பணி ஓய்வு பெற்றவரின் வாழ்க்கை!

1.ஓய்வு பெற்றவர் அதிக நேரம் படுக்கையில் படுத்திருந்தால்…

மனைவி : இன்னுமா எழுந்துக்கல? எவ்வளவு நேரம் தூங்குவீங்க! வேலை இல்லைனா எப்ப பாரு தூங்கனுமா?

 

2.ஓய்வு பெற்றவர் அதிகாலையில் எழுந்துவிட்டால்…

மனைவி : உங்களுக்கு தூக்கமே வராதா? காலைல 4 மணிக்கே எழுந்து சத்தம் போட்டால், மத்தவங்க எப்படி தூங்குவாங்க ? ஆஃபீஸ் இல்லன்னா, பேசாம தூங்குங்க!

 

3. ஓய்வு பெற்றவர் வீட்டிலேயே இருந்தால்…

மனைவி : எழுந்ததும் மொபைலும் கையுமா உட்கார்ந்தா எப்படி? எப்பப் பாரு
டீ டீ னு .கேட்டுக்கிட்டு.. ! சின்ன சின்ன வேலைகளை செய்யலாம் இல்ல ? வீட்டை விட்டு வெளியே கிளம்பாமல், இங்கேயே உக்காந்து கிட்டு… சும்மா… . உங்களால எல்லாருக்கும் வீட்டு வேலை லேட்டாகுது!

 

4. ஓய்வு பெற்றவர் எப்பொழுதும் வெளியே சுற்றித் திரிந்தால்…

மனைவி : இவ்வளவு நேரம் எங்க போனீங்க? ஆஃபீஸ் தான் இப்ப
கிடையாதே? இப்போவும் வீட்டிலே சும்மா இருக்க முடியலையா? குடும்பத்தோடு கொஞ்சம் பேசலாம் இல்ல …..!

 

5. ஓய்வு பெற்றவர் பக்தி வழிபாட்டில் ஈடுபட்டால்…

மனைவி : கோவில் கோவிலா சுத்தினா பணம் வருமா? அப்படி இருந்திருந்தா பூசாரிகள் தான் பெரிய பணக்காரர்கள் ஆகிருப்பாங்க…. . டாடா, பில் கேட்ஸ் எல்லாம் இல்லையே! எப்பவும் “ராம்ராம்”, சங்கரா சங்கரா…. மாலை, மணி—அதே வேலை தானா!

 

6.ஓய்வு பெற்றவர் மீண்டும் வேலையிலே சேர்ந்தால்…

மனைவி : உங்களுக்கு வேலைதான் எல்லாமா? இவ்வளவு வயசு ஆகிவிட்ட பிறகும் பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டுமா? எப்பவுமே உங்களுக்காக காத்திருக்கனுமா நாங்க?

 

7.ஓய்வு பெற்றவர் மனைவியை புனித யாத்திரைக்கு அழைத்துச் சென்றால்…

மனைவி : பக்கத்து வீட்டு மோகனப் பாருங்க…. ஒவ்வொரு மாதமும் தன் மனைவியை ஷிம்லா, டார்ஜிலிங் எல்லாம் கூட்டிட்டு போறாராம்! நீங்கோ, எப்பவும் என்னை மருதமலைக்குத் தான் கூட்டிக்கொண்டு போகிறீங்க!

 

8.ஓய்வு பெற்றவர் மனைவியை சுற்றுலா இடங்களுக்கு (நைனி தால், காஷ்மீர், கோவா, ஊட்டி…) அழைத்துச் சென்றால்…

மனைவி : வீடு தான் முக்கியம் ! வீணா செலவு பண்ணுறீங்க. உங்க கிட்ட பணம் கொட்டிக் கிடக்குதோ? அந்தப் பணத்தை வச்சு வீட்ட modify செய்யலாம்… , எனக்கு நாலு புடவை வாங்கி தரலாம்….

 

9.ஓய்வு பெற்றவர் பழைய பாடல்களை ரசித்தால்…

மனைவி : கிழத்துக்கு காதல் பாட்டு கேக்குதோ…. ? இளைமை ஊஞ்சலாடுதோ? பாடணும்னா பக்திப் பாடல்கள் பாடுங்க!

 

10.ஓய்வு பெற்றவர் நண்பர்களை அழைத்துப் பேசினால்…

மனைவி :
எப்பவும் மொபைலும் கையுமா…… தான் பேச்சுப் பேச்சு…. ! யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசறீங்க? நாங்கள் யாரையும் இப்படி பேசி போரடிக்க மாட்டோம்!

 

11.ஓய்வு பெற்றவர் அழகாக மேக்கப் போட்டு இருந்தால் …
மனைவி :
இந்த வயசில அலங்காரம் கேக்குதோ ? வேற எங்கே போகப் போறீங்க? வீட்டில் மருமகள் இருக்கிறா—உங்களைப் பார்த்து என்ன நினைப்பா?

ஆஹா! ஓய்வு பெற்ற வாழ்க்கை!
எல்லா ஓய்வு பெற்ற நண்பர்களுக்கும்
அன்பான அர்ப்பணிப்பு

உண்மையிலேயே நம்மில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் அனுபவங்கள் தான்..

Read Previous

மனதை ஆழமாக தொட்ட கதை..!! அனைத்து பெண்களும் ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வாழ்க்கை விளையாடுகிறது அனைவரிடமும்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular