
மத்திய மற்றும் மணிலா அரசு பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு 3 தவணையாக நிதியுதவி வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின் போதுமான ஓய்வு வேண்டும் என்பதால் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முதல் குழந்தைக்கு இரண்டு தவணையாக ரூ.5000 மற்றும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஒரே தவணையாக பெண் குழந்தையாக இருந்தால் ரூ.6000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற வேண்டுமானால் அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் (http://wcd.nic.in) படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அங்கன்வாடி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.