
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ கண்டிப்பாக இதை பின்பற்றுங்கள்..!!
அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் விரும்புவது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழத்தான். அதற்கு நாம் இதையெல்லாம் பின்பற்றினாலே போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் நாம் மனம் விட்டு வாய்விட்டு வெளிப்படையாக சிரிக்க வேண்டும். நம்மளை நாமே மதிக்க வேண்டும். உண்மையான நண்பர்களை மட்டும் நம்முடன் வைத்திருக்க வேண்டும். நமக்குப் பிடித்த விஷயங்களை நாம் ரசித்து செய்ய வேண்டும். ஒருபோதும் அடுத்தவர்களிடம் வதந்திகளையும் அடுத்தவர்களைப் பற்றிய புரளிகளையும் பேசக்கூடாது. நம்மால் முடிந்த உதவியை அடுத்தவருக்கு நாம் செய்ய வேண்டும். மற்றும் நம்மை சுற்றியுள்ளவர்களே நாம் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் நடந்த அற்புதமான நிகழ்வுகளை நாம் அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் எதையும் தாங்கும் மனதோடு இதுவும் கடந்து போகும் என்று எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் நம்மிடம் வேண்டும். ஒருபோதும் தலைகனம் என்பது இருக்கவே கூடாது. நமக்கான ஒரு சில குறிக்கோள்களை உண்டாக்கி அதை நடத்தி முடிக்க நாம் பயணிக்க வேண்டும். அடிக்கடி வெளியே செல்ல வேண்டும் இவ்வாறு செல்வதால் மனதில் உள்ள பல பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். குறிப்பாக தன்னம்பிக்கையோடும் நம் மனசாட்சிக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினாலே போதும் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவோம்.