Woman hands breaking an egg to separate egg- white and yolk
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவில் ஒன்றுதான் முட்டை. இதை சாப்பிடுவதில் நாம் பெரும் கவனத்தை வைத்திருக்கிறோம். காரணம் இதில் 10% புரதம் இருக்கிறது. கொழுப்பு வெள்ளை கருவில் சுத்தமாக கிடையாது. ஆகையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிச்சயமாக சாப்பிடலாம்.
ஆனால் ஒரு சிலர் இந்த முட்டையை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். முக்கியமாக உடற்பயிற்சி செய்பவர்கள் விளையாட்டு வீரர்கள் இதை பச்சையாக சாப்பிடுவதை விரும்புகிறார்கள். ஆனால் இப்படி செய்வதனால் எந்தவித சக்தியும் கிடைக்காது ஆபத்து மட்டும் தான் கிடைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பச்சை முட்டையின் வெள்ளை கருவில் அவிடின் என்னும் புரதச்சத்து இருக்கிறது. இது முட்டையில் இருக்கும் பயாட்டின் எனும் வைட்டமின் உடன் சேரும் பொழுது சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவதை தடுத்து வைக்கிறது. முட்டையை வேக வைத்தால் அந்த வெப்பத்தில் அவிடின் அழிந்துவிடும்.
இதனால் முட்டையில் இருக்கும் பயாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தை விட இதுதான் நமது உடலுக்கு மிகவும் தேவை. நமது முடியின் வளர்ச்சிக்கு பயாட்டின் முக்கிய உதவி செய்து வருகிறது. ஆகையால் முட்டையை வேகவைத்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.




