
ரத்தன் டாடாவின் Quotes:
* “சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பதுதான்”.
* “ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கும்”.
* “வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட”.
* “நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்”.
* “முக்கியமான விஷயம் என்னவென்றால், எவ்வளவு சிறிய முன்னேற்றமாக இருந்தாலும், முன்னேற்றம் முக்கியமானது”.
* “எதிர்காலம் நாம் நுழையும் ஒன்று அல்ல. எதிர்காலம் நாம் உருவாக்கும் ஒன்று”.
* “எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும்,சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் அதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது”.
* “புதுமை என்பதுதான் போட்டியிலிருந்து வேறுபட்டு, முன்னேற ஒரே வழி”.
* “வியாபாரத்தில், நீங்கள் ஒரு தயாரிப்பை உருவாக்கவில்லை. நீங்கள் ஒரு வாடிக்கையாளரை உருவாக்குகிறீர்கள்”.
* “நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்”.
* “நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு அதை சரியானதாக மாற்றிவிடுவேன்”.
* “வாடிக்கையாளர் நம் நிறுவனத்திற்கு வரும் மிக முக்கியமான விருந்தினர். அவர்கள் நம்மை சார்ந்திருப்பதில்லை. நாமே அவர்களை நம்பியிருக்கிறோம். அவர்கள் நம் வேலையில் ஒரு இடையூறு அல்ல. அவர்கள் நம் வேலையின் நோக்கம். அவர்கள் நம் வியாபாரத்தில் ஒரு வெளி ஆட்கள் அல்ல. அதன் ஒரு பகுதி”
* “இரும்பை எளிதாக அழித்துவிட முடியாது. ஆனால், துருப்பிடித்த இரும்பு பயனில்லாமல் போகிறது. நம் மனதையும் துருப்பிடிக்காமல் வைத்துக்கொண்டால் நம்மை யாரும் எளிதில் வீழ்த்திவிட முடியாது.”
* இரும்பை எதனாலும் அழிக்க முடியாது. ஆனால் அதிலிருந்து உருவாகும் துருவால் முடியும். அதுபோலதான் ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது. ஆனால் அவரின் சிந்தனையால் முடியும்.
* “நமது எளிய இலக்கு எதுவென்றால் நாம் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்தவர்களாக இருப்பதுதான்”.
ரத்தன் டாடாவின் இந்த Quotes-கள் அவரது தலைமைத்துவத்தின் பண்புகளைப் பிரதிபலிக்கிறது. தொழில் உலகில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, வாழ்க்கையில் எந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் இவை உத்வேகம் அளிக்கும்…..