சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் தொடர் மழை வெள்ளப்பெருக்காக மாறி உள்ளது, இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது அதை தொடர்ந்து மீண்டும் 4.30 மணி அளவில் நிலச்சரிவு ஏற்ப்பட மக்கள் எல்லாம் அச்சத்தில் தவித்துள்ளார்கள்.
மேலும் இந்த கனமழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வீடுகள் சேதாரம் அடைந்தும் மற்றும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதுமாய் இருக்கிறது, மேலும் இத்தகைய கோர விபத்தில் 19 பேர் பலியானார்கள் 50 பேர் சிகிச்சையிலும் 500-க்கும் மேற்பட்ட பெயர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இதைக் குறித்து கேரளா பிரதமரிடம் கேரளாவிற்கு தேவையான அனைத்து தேவைகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி அவர்கள் உறுதியளித்துள்ளார் மேலும் உயிர் பலியானவர்களுக்கு தலா 20 லட்சம் என்றும் காயம் ஏற்பட்டவர்களுக்கு தலா 5 லட்சம் என்றும் மோடி அறிவித்துள்ளார்.