சிறியவர் முதல் பெரியவர் வரை கத்திரிக்காய் சாப்பிடும் பொழுது, உடல் ஆரோக்கியமாகவும் உடலில் ஏற்படும் கபம் பித்தம் நோய்கள் குணமாகும்..
கத்திரி காய்களில் தசைக்கும் ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் உள்ளது இதனால் வாய்வு பித்தம் கபம் போன்ற பிரச்சனைகள் அகன்று விடும், நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்திரிக்காயில் வைட்டமின்கள் ஏசி b1 மற்றும் பி2 காணப்படுகின்றன, இரும்புச்சத்து புரதம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் பாஸ்பரஸ் கால்சியம் நிறைந்துள்ளது, வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீழ்வாதம், சளி, பித்தம், தொண்டை கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் தன்மை கத்திரிக்காய்க்கு உண்டு, மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது கத்திரிக்காயின் மிக முக்கிய வேலையாகும், மூச்சு விடுதலில் சிரமம் உள்ளவர்கள் மற்றும் தோல் மறுத்து விடுவதால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிடுவதனால் சிறந்த பலன் பெறுவார்கள், அதேபோல் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும் சருமத்திற்கும் உடலுக்கும் மிகவும் உதவுகிறது, தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கலாம், நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருவது நல்லது வாய்வு பிடிப்பு நீங்கும் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும், குரல்வா நோய்கள் வராது கல்லீரல் மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் கேரட் ஜூஸ் நல்ல மருந்தாகும் மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது..!!




