விதியும்.. மதியும்..!! தோல்வியிலிருந்து வெளியே வாங்க.. உங்களுக்காக அழகான உலகம் காத்துக்கொண்டிருக்கிறது..!!

விதியும்_மதியும்…..

நண்பன் ஒருவன் பிஸினஸ் முயற்சி
தோற்றதில் வருத்தத்தில் இருந்தான்.

பணநஷ்டம் அதிகமில்லை, தோல்வியால்
வந்த மனக் கஷ்டம்தான் அதிகம்.

பணம், காசு தருகிறோமோ இல்லையோ
கஷ்டத்தில் இருக்கிறவனை
நேரில் பார்த்து ஆறுதலாகவோ,
ஊக்குவிக்கிற மாதிரியோ
நாலு வார்த்தை பேசுவது
அவர்கள் கஷ்டத்திலிருந்து மீண்டு
வருவதற்கு உதவியாக இருக்கும்.

போனேன்.

ஒரு மாதமாகச் சிரைக்காத முகம்.
அழுக்கு லுங்கி, கிழிசல் பனியன் என்று
சோகக் காட்சிக்கு ஏற்ற தோற்றம்.

ஆல் இண்டியா ரேடியோவில்
பெரிய தலைவர்கள் செத்துப் போகும்
போது வாசிக்கும் தில்ரூபாவைப்
பின்னணி இசையாகப் போட்டால் ..
மிக பொருத்தமாக இருக்கும்.

‘எல்லாம் என் தலைவிதி,
இப்படியெல்லாம் ஆகணும்ன்னு இருக்கு.
அதை எப்படி மாத்த முடியும்?’
என்று நொந்து கொண்டான்.

சோகக் காட்சியில் நடிக்கும் மௌலி போல
பேச்சுக்கு நடுவே அவ்வப்போது
மூக்கை மட்டும் உறிஞ்சிக் கொண்டான்.

‘போகட்டும் விடு, வந்தவனுக்கு
ஒரு காபி தர மாட்டியா?’
என்றேன் சிரித்துக் கொண்டே.

‘சாரி டா. வய்ஃப் ஊர்ல இல்லை.
எனக்கு காஃபி போடத் தெரியாது…’
என்று இழுத்தான்.

‘கிச்சன்ல எது எங்கே இருக்குன்னு
சொல்லு, ரெண்டு பேருக்கும்
நான் காபி போடறேன்’ என்று
காபி போட்டுக் கொண்டே
அவனோடு பேசினேன்.

‘உன் கேரியர் நல்லா இருந்தது. ஃ
பைனான்ஷியலா உனக்கு எந்தக்
கஷ்டமும் இல்லை.

நீ _ _ _ _ _

கம்பெனியிலேதான் முதல்லே
வேலைக்குச் சேர்ந்தே இல்லே?

அங்கே வேலை கிடைக்கிறது
ரொம்ப சிரமம்ன்னு சொல்வாங்களே?’
என்று பழசைக் கிண்டினேன்.

‘முப்பது பேர் வந்திருந்தாங்க
ரிட்டன் டெஸ்ட்டுக்கு’
என்று உற்சாகமாக ஆரம்பித்தான்.’

முப்பதில மூணு பேரைத்தான்
இண்டர்வியூவுக்கு செலக்ட் பண்ணாங்க.

இ ஈஸ் ஈக்வல் டு எம் ஸி டி ங்கிற
ஈக்வேஷன் தந்திருந்தாங்க.

அதைப் பத்தி பிரமாதமா எழுதினது
நாந்தானாம்!

கம்பெனி எலட்ராலிஸிஸ் கம்பெனி ஆச்சே,
செலக்ட் ஆய்ட்டேன்’

‘எப்படி உனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு?
நீ படிச்சது மெக்கானிக்கல் ஆச்சே?’

‘கரெக்டு. மூணு ஆப்பர்ச்சூனிட்டி
போயாச்சு. இந்த வேலையை
எப்படியாவது பிடிச்சிடணன்னு
உள்ளே ஒரு உத்வேகம்.

மூளையை கசக்கிக்கிட்டு யோசிச்சேன். பத்தாங்கிளாஸ்ல படிச்சது ஞாபகம் வந்தது”

‘ம்ம்ம்.. குட். பை தி வே, கிச்சனை
நல்லா நீட்டா வச்சிருக்கா உன் வய்ஃப்’

‘கிச்சனை மட்டுமா? மொத்த வீட்டையும்,
என்னையும் கூட நல்லா வச்சிருக்கா’

‘யு ஆர் லக்கி டு ஹேவ் சச் அ வய்ஃப்’

‘லக்கியா!

இவளை லவ் பண்ண நான்
என்னல்லாம் பண்ணேன்னு
உனக்குத் தெரியுமில்லே?

எத்தனை எதிர்ப்பு, எவ்வளவு தடங்கல்!
அவ்வளவையும் ஜெயிச்சி
வெற்றி வீரனா இவளைக்
கல்யாணம் பண்ணிகிட்டேன்.

லக்கின்னு அஞ்சு எழுத்தில
சொல்லிட்டே?’

‘தலைவிதின்னா என்னடா மாப்ளே?’
என்றேன் காபியை தந்து கொண்டே.

‘முன்னரே விதிக்கப்பட்டது.
இதிது இப்படி இப்படித்தான்
நடக்கணும்ன்னு’

‘உனக்குக் கிடைச்ச வேலையும்,
மனைவியும் உன் திறமைக்குக்
கிடைச்சதாத்தானே சொல்றே?

தலைவிதின்னா சொல்றே?’

‘எவனாவது
நல்ல வேலை கிடைக்கிறப்போ

என் தலைவிதி, நல்ல வேலை
கிடைச்சிடிச்சுன்னு சொல்வானா?

என்ன பேசறே நீ?
பைத்தியக்காரத்தனமா இருக்கே?’

‘கெடுதலை மட்டும்தான்
கடவுள் விதிக்கிறாரா?

நல்லதை எல்லாம் தானே
உருவாக்கிக்கிற சர்வ வல்லமை
படைச்சவனா நீ?’

‘அப்படீன்னா?’

‘விதியை நம்பினேன்னா,
நல்லது, கெட்டது ரெண்டுமே
விதிக்கப்பட்டதுன்னு நம்பணும்.

முயற்சியை நம்பினேன்னா
தோல்விகளுக்கும் காரணம்
நாமதான்னு ஒத்துக்கணும்.

தோத்தா விதி,
ஜெயிச்சா நானுங்கிறது
டுபாக்கூர் ஃபார்முலா’

‘நீ என்ன சொல்ல வர்ரே?’

‘விதி, முயற்சி ஏதாவது
ஒரு ரூட்ல போ.

ரெண்டுமே ஓக்கேதான்.

இதுவுமில்லாம அதுவுமில்லாம
நடுவில நடந்தா
ஊர்போய்ச் சேர முடியாது.

ஏன்னா நடுவில ரூட்டே இல்லை’

நாம் எதற்கெல்லாம்
கிரெடிட் எடுத்துக்கொள்கிறோமோ

அதற்கு ஈடான எதிர்வினைகளுக்கும்
நாமே டெபிட் எடுத்தாகவேண்டும்…

என்ன நான் சொல்றது சரிதானே?

வாங்க தோல்வியில் இருந்து வெளியே வாங்க..

உங்களுக்காக உலகம்
உற்சாகத்தோட காத்திருக்கிறது

நீங்களா அதான்னு ஒரு பார்த்திடுவோமா?

இறைவன் மேல பாரத்தை போட்டுவிட்டு
சுறுசுறுப்பாக கிளம்பி வாங்க..

ஜெயிச்சி காட்டுவோம்….

Read Previous

கண்ணீர் வர வைக்கும் நீதிக்கதை..!! நாம் நம்முடைய பெற்றோர்களை எப்படி பார்த்துக் கொள்கிறோமோ.. அதைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் நம்மளை பார்த்துக் கொள்வார்கள் ..!!

Read Next

பெண்களின் தியாகத்தை கதை கதையாக படிச்சிருப்போம்.. ஆனால் ஆண்களின் தியாகம் ஒரு சொல்லப்படாத கதை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular