நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
நடிகை அதிதீரால் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.
மலையாள திரைப்படமான பிரஜாபதி என்ன திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து இசை சார்ந்த காதல் நாடகம், ராக்ஸ்டார், திகில் ட்ரில்லர், திரில்லர் வாசிர், பத்மாவத் உள்ளிட்ட பல ஹிந்தி படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
அதைத்தொடர்ந்து காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு அறிமுக நடிகைக்கான விருதை வாங்கி இருந்தார்.
பின்னர் செக்கச் சிவந்த வானம், சூபியும் சுஜாதாயும், மகா சமுத்திரம் மற்றும் ஏ சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.
தற்போது சித்தார்த்துடன் காதலில் இருக்கும் அதிதி ராவ் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அதிதீ ராவ் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது விருது விழாவிற்கு சென்றிருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
View this post on Instagram