வெனிசுலாவில் நேற்று (ஜன.03) அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மதுரோவின் பாதுகாப்பிற்கு இருந்த வெனிசுலா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.




