கோடைகாலத்தில் நமது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக காணப்படுகிறது. அதில் நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு முக்கியமான உணவு தான் வெள்ளரிக்காய். இந்த வெள்ளரிக்காயை வைத்து ரொட்டி எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 2
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 4
ரவை – 1 கப்
தேங்காய் – 3/4 கப்
செய்முறை :
முதலில் வெள்ளரிக்காய் மற்றும் தேங்காயை நன்கு துருவிக் கொள்ளவும். கொத்தமல்லி பச்சை மிளகாயை பொடிப்பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து துருவிய வெள்ளரிக்காய் தேங்காய் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி ரவை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
அதை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடைசியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சப்பாத்தியை திரட்டுவது போல இதயும் திரட்டி சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வெள்ளரிக்காய் ரொட்டி தயார்.



