ஃபேஸ்புக் நிறுவனர் மார்கின் சொத்தின் மதிப்பு அதிகரிப்பு..!!
உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerberg உலக பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, இந்த வருடத்தின் முதல் நாளில் இருந்தே அவரின் சொத்தின் மதிப்பு 57.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் , 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி, தற்போது வரை அவரின் சொத்தின் மதிப்பு 70% அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 343 கோடி டாலர் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதால் உலகின் 2வது பணக்காரர் பட்டியலில் முன்னேறியுள்ளார்.




