27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை வென்ற மும்பை அணி.. வெளியான முக்கிய தகவல்..!!
இந்தியாவின் உள்ளூர் போட்டிகளின் ஒன்றான, இரானி கோப்பைக்கான போட்டிகள் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், கடந்த 2023-2024 ஆண்டுக்கான ரஞ்சி டிராபியை வென்ற மும்பை அணிக்கும், இந்தியாவின் B டீம்மாக பார்க்கப்படும், ரெஸ்ட் ஆப் இந்திய அணிக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் டிரா ஆன நிலையில், முதல் இன்னிங்ஸில் மும்பை அணி முன்னிலை பெற்றதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை மும்பை அணி வென்றுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.




