நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று அகத்திக் கீரையை நாம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.
அகத்திக் கீரையை நாம் அதிகமாக உண்டு வந்தால் நமது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நம்மை விடுபட செய்யும். சீக்கிரம் ஜீரணமாகும் சக்தி உடைய ஒரு உணவாக இருக்கிறது இந்த கீரை. அதுமட்டுமில்லாமல் பித்தத்தை தணிக்கவும் இந்த கீரை மிகவும் உதவுகிறது.
உங்களுக்கு கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்ய இந்த கீரை ஒரு சரியான தீர்வாகும். மேலும் இது பற்களின் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு குடல் புண் இருந்தால் அதை சரி செய்ய இது மிகவும் உதவும். எனவே இத்தனை நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கிய அகத்திக் கீரையை சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சேர்ப்போம்.



