Oplus_131072
#பேச்சாளர்களுக்கு
நாக்கு = மகுடி
#வியாபாரிகளுக்கு
நாக்கு = முதல் மூலதனம
#அரசியல்வாதிகளுக்கு
நாக்கு = சதுரங்கம்
#ஊமைகளுக்கு
நாக்கு = ‘ கனவு ‘
#கடன்வாங்குபவர்களுக்கு
நாக்கு = பிட்சைப் பாத்திரம்
#காதலர்களுக்கு
நாக்கு = அவரவர் அனுபவத்திற்கேற்ப
நினைத்துக் கொள்ளலாம்..?
#மனிதன் நாக்கை எப்படிக்
கையாளுகிறான் தெரியுமா…?
#உண்மை பேசுவது – #பொய் பேசுவது
உண்மையைப் பொய் மாதிரி பேசுவது
#பொய்யை #உண்மை மாதிரி பேசுவது
#சமயத்தில்
#பொய் பேசுகிறோமா…?
#உண்மை பேசுகிறோமா…? என்று
#தெரியாமல் பேசுவது…!
“#நான் சொன்னா சொன்ன மாதிரி செய்வேன் “என்று சொல்லும் சில நாக்குகள் சொல்லி விட்டு எச்சில் விழுங்கும் போது சொன்னதை
விழுங்கி விடுகின்றன…!
“#வாக்குக் குடுத்தாக் குடுத்தது தான் ”
என்று பேசும் சில நாக்குகள் பேசி விட்டு எச்சில் துப்பும் போது
பேசியதையும் துப்பி விடுகின்றன…!
#கவிஞர்களின் நாக்கு பேசும் போது
கவிதை பிறக்கிறது…!
#அழகிகளின் நாக்கு பேசாத போதும்
கவிதை பிறக்கிறது…!
#குழந்தைகளின் நாக்கு பேசத் தெரியாமல் பேசுகையில் கவிதை பிறக்கிறது…!
#இந்த இடங்களில் மட்டுமே நாக்கு நல்லதாக இருக்கிறது…!
#இயற்கையாகவே உடல் உறுப்புகளில்
‘ நாக்கு ‘தான் சிவப்பு…!
‘அபாயம் ‘என்னும்அறிவிப்புப் பலகையோ ‘ நாக்கு ‘…?!
#ஒரு மனிதன் இறக்கும் போது
பாருங்கள்…!
கை முடங்கும்
கால் முடங்கும்
கடைசியாகத் தான் நா முடங்கும்…!
ஏன்…?
மொத்த ஆசைகளும் நாக்கில் தான் தொங்கிக் கொண்டிருக்குமாம்…!
மனிதன் குறியின்றிப் பிறந்திருந்தால்
மோகம் இருந்திருக்காது…!
நாக்கின்றிப் பிறந்திருந்தால்
துரோகம் இருந்திருக்காது…!
இரண்டுமின்றிப் பிறந்திருந்தால்
மரணம் இருந்திருக்காது…!
நரம்பில்லாதது தான் நாக்கு;
வரம்பில்லாததே அதன் போக்கு!
வீண் சர்ச்சைகளை நீ நீக்கு;
வேண்டாம் கொடுத்திட வாக்கு.




