அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!!

 

#வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

#உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும்.

#வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

#அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. அவரைக்காயில் உடலுக்கு தேவையான

#சத்துக்கள் அதிகம் இருப்பதால், உணவில் அடிக்கடி இதை சேர்த்து கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.
பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.

#அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

#அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

#அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இத் ரத்தத்தைச் சுத்தபடுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

#சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

#அவரைக்காய் #மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் #பொருமலை நீக்கும். #மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது #சிறுநீரைப்பெருக்கும், சளி, இருமலைப் போக்கும்…!

Read Previous

தினமும் பரோட்டா சாப்பிட்டால் என்ன ஆகும்..?? மைதா பற்றிய உண்மையும் தவறான நம்பிக்கைகளும்..!!

Read Next

மனித உறுப்புகளில் நம்மை மிரள வைத்த உறுப்பு நாக்கு தான்..!! ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular