தேவையான பொருட்கள்:
முழுக் கோழி – 1, மிளகு – ¼ கப், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 15 பல், கிராம்பு – 2, ஏலக்காய் – 2, பட்டை – சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் – 250 கிராம், தக்காளி – 4, நெய் – 100 கிராம், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோழியின் தோலை உரித்து சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். மிளகை பொடி செய்து வைக்கவும். தக்காளியை பிழிந்து சாறெடுத்து வைக்கவும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து விழுதாக்கவும். ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை நெய்யில் வறுத்து அரைக்கவும். கடாயில் நெய் விட்டு சூடானதும், சோம்பை தாளித்து, மற்ற பொருட்களை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும். பிறகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.




