Oplus_131072
அட்சதை போட்டு ஏன் வாழ்த்த வேண்டும்….
திருமணம் என்றாலே அட்சதை என்பது நம் அனைவருக்கும் ஞாபகம் வரும். திருமணத்தின் போது தம்பதிகளை அட்சதை போட்டு அனைவரும் வாழ்த்துவோம். எதற்காக நாம் இப்படி அட்சதை போட்டு வாழ்த்துகிறோம் என்பதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அட்சதை என்றால் குத்துப்படாததும், பழுதற்றதும் என்று பொருள்படும். பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).
நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.




