திருமணத்திற்குப் பின் #அண்ணன்_தம்பி உறவு அக்கா தங்கை உறவு போல் நீடிப்பதில்லையே ஏன்?
எல்லாத்துக்கும் பெண்கள் தாங்க காரணம் .
அண்ணனின் மனைவியும் தம்பியின் மனைவியும் ஒருவரோடு ஒருவர் ஒத்து போக மாட்டார்கள். அந்த இரு பெண்களின் தாய்மார்களும் அண்ணன் தம்பிகளை பிரிப்பது தான் சாமர்த்தியம். இளிச்சவாயா இருந்தா சொத்து கிடைக்காது. முதல்ல குடும்பத்தை பிரிச்சு சொத்தை கேளு என பெண்களுக்கு அறிவுரை கூறுவார்கள்.
அந்த பெண்கள் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே அக்குவேரு ஆணிவேராக பிரித்து விடுவார்கள். திருமணத்திற்கு முன் ஒரு தட்டில் ஒன்றாக சாப்பிட்டு இருந்த அண்ணன் தம்பிகள் திருமணத்திற்கு பின் பெரும் பகையாளிகளாக மாறியிருப்பார்கள்.
ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தையே இல்லாமல் போயிருக்கும். அண்ணனுக்கு திருமணமாகி தம்பிக்கு திருமணம் ஆகாத வரைக்கும் திண்டாட்டம் தான். சில அண்ணிகள் சரியாக உணவு கூட கொழுந்தனாருக்கு போடுவதில்லை.
பெண்களுக்கு இரண்டு முகங்கள். அவர்களின் அக்கா தங்கைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். அக்காவும் தங்கையும் தானே குடும்பத்தை வழி நடத்துகிறார்கள்.அவர்களின் ஒற்றுமை என்றும் குறையாது.மாறாக அவர்களின் கணவரின் சகோதரர்களின் உறவை மட்டும் வெட்டி விடுவார்கள்.
அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக கடைசி வரைக்கும் ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அக்கா தங்கைகளை திருமணம் செய்ய வேண்டும்….




