கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஊழியர் அனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டி, வீடியோ பதிவு வெளியிட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாக இருந்த தவெக பிரமுகர் சங்கரை, தனிப்படை போலீசார் சென்னை பல்லாவரத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




