ஊட்டியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த ஷாஜி கிருஷ்ணன் (60) என்பவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கங்கைகொண்டான் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, படுக்கைக்கு ஏறும் இரும்புக் கம்பியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பேருந்தை நிறுத்தி தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற கங்கைகொண்டான் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஷாஜி கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




