ஓசூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.10.3 கோடி ரொக்கம் பறிமுதல்!

 

 

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தமிழ்நாட்டிற்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினரும் போலீசாரும் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர்.

 

கேரள பதிவு எண் கொண்ட காரை பெங்களூரு–ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி சோதனை செய்தபோது இந்தப் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. காரில் இருந்த சச்சின் (42) கைது செய்யப்பட்டார்.

 

இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.1.3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மொத்தம் ரூ.10.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பணம் எங்கிருந்து வந்தது, எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தங்க மோதிர திட்ட டெண்டர்: ஜாய் ஆலுக்காஸுக்கு 70%, கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு 30%!

Read Next

அரசு பேருந்தில் பயணி தற்கொலை! நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular