அர்ச்சனை செய்வதற்கு முன்பு தட்டை நீட்டி தொட்டு கும்பிட சொல்வது ஏன் தெரியுமா..??
நாம் கோவில்களுக்கு செல்லும் பொழுது அர்ச்சனை செய்வதற்கு முன்பு கோயிலில் உள்ள பூசாரி அல்லது ஐயர் தட்டைத் தொட்டு கும்பிட சொல்வார்கள் அதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்கலாம். அல்லது வாழ்வில் இன்னும் மேம்பட இறைவனை வேண்டுவதற்காக இருக்கலாம். துன்பங்களை தாங்கும் மன உறுதி கேட்கலாம் கோயிலில் அர்ச்சனை செய்வது வீட்டில் பூஜை செய்வதை காட்டிலும் சக்திவாய்ந்தது அங்கிருக்கும் தெய்வம் பத்திர பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக திகழ்கிறது ஆலயங்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்து வருவார்கள் அதாவது நாம் ஒன்றை வேண்டிக் கொண்டு நம்முடைய பிரார்த்தனையை கடவுளிடம் சமர்ப்பிப்பது காம்ய பூஜை சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்தல் கூடாது. தாங்கள் தனியாக ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கூட்டத்துடன் சேர்ந்து வழிபட்டாலும் இறைவனின் அருள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையை செய்யும் அதன் பொருட்டே ஆலயங்களில் அர்ச்சகர் பெருமக்களால் ஆகம முறைப்படி இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன அவர்கள் அனுதினமும் சங்கல்பம் செய்து கொண்டு பூஜைகளை தொடங்குவார்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை செய்ய விரும்பினால் தட்டில் உள்ள புஷ்பத்தையோ குங்குமத்தையோ அவர்களின் பெயர் நட்சத்திரக் கூறி தொடச்செய்து பூஜை செய்வது மரபு என்று கருதப்படுகிறது.




