அல்லு அர்ஜூன் உடன் இணையும் பெரும் இயக்குனர்..!! தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்..!!

இன்று தெலுங்கில் பிரபலமான நடிகரான அல்லு அர்ஜுனின் பிறந்தநாள். இவர் நடித்த புஷ்பா மற்றும் புஷ்பா 2 பெரும் வரவேற்பை பெற்று இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது இணையதளத்தில் இன்று ஒரு பட அறிவிப்பை வெளியிடப் போவதாக கூறி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி இன்று அந்த அறிவிப்பும் வந்தது.

ரசிகர்களால் கடந்த சில நாட்களாக அதிகம்  எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் கூட்டணி தான் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணி. அல்லு அர்ஜுனும் சரி அட்லீயும் சரி தங்களது அடுத்த படம் மிகுந்த வரவேற்பு பெறக்கூடிய படமாக இருக்கும் என்று அவ்வப்போது தெரிவித்தே வந்தனர். ரசிகர்கள் இவர்கள் இருவரும் தான் இணைய போகிறார்கள் என்று கணித்து இருந்தனர். அந்த வகையில் இன்று அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கியுள்ளது.

அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லீ அவர்கள் இயக்கப் போகிறார். இந்த படத்திற்கான தொழில்நுட்ப உதவிக்காக இவர்கள் இருவரும் அமெரிக்கா சென்ற வீடியோக்களை இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காட்டியுள்ளனர். இந்த படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கதையின் ரீதியாகவும் மிகப் பெரிய படமாக அமையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்..!! என்று கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா..??

Read Next

இளநரை வராமல் தடுக்கும் எண்ணெய்..!! இளநரை பிரச்சினை இருப்பவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular