ஆட்டுக்கால் பாயா என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அப்படி இருக்கும்போது ஆட்டுக்கால் பாயா செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்..
ஆட்டுக்கால் பாயா கிரேவி செய்ய தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் நான்கு, வெங்காயம் நான்கு, தக்காளி மூன்று, இஞ்சி பூண்டு விழுது நாலு டீஸ்பூன், கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் ஐந்து, தேங்காய் பால் ஒரு கப், தேங்காய் துருவல் கால் கப், முந்திரி பத்து, கசகசா ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், மிளகாய்த்தூள் ரெண்டு ஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப, செய்முறை : தேங்காய் துருவல் முந்திரி, கசகசா இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும், இரண்டு வெங்காயம் மற்றும் ஒரு தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும், ஆட்டுக்காலி சுத்தம் செய்து நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் தனி மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும், மீதமுள்ள வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டும் தாழ்ந்ததும் வெங்காயம் மீதமிருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் வதங்கியதும் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும் அரைத்து வைத்துள்ள தேங்காய் முந்திரி கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும், நன்றாக கொதிக்கும் போது தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும் கொதித்ததும் தேங்காய் பால் சேர்க்கவும் நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடனே அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து இறக்கி விட வேண்டும் சுவையான ஆட்டுக்கால் பாயா கிரேவி தயார், ஆட்டுக்கால் பாயா கிரேவியுடன் சாப்பிட வேண்டியது சூடான சப்பாத்தி நான் பரோட்டா மற்றும் சூடான சாதம்…!!




