இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.
பாலினம் மற்றும் பிறந்த தேதியை ஒரு முறை மட்டும் தான் மாற்ற முடியும். உங்களுடைய பெயரை ஆதார் கார்டில் 2 முறை மாற்றிக் கொள்ளலாம். இது தவறுகளை திருத்துவதற்கு அல்லது திருமணமாகி ஒரு பெண் தங்கள் குடும்பப் பெயர்களை மாற்றுவதற்கு பயன்படுத்த உதவுகிறது. முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். வாடகை வீடுகளில் வசிப்பவர்களும் பிற வீடுகளுக்கு மாறும் பட்சத்தில் இந்த முகவரி விவரங்களை வீடு மாறும் போதெல்லாம் மாற்றிக் கொள்ள முடியும்.



