சென்னை மாதவரம், வசந்தம் அவென்யூ பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் அமேசானில் ‘ஓரியண்ட்’ பிராண்ட் சீலிங் பேன் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஆக.8) மாலை ஆகாஷ் வீட்டிற்கு, பொருள் டெலிவரியானது. அதனை திறந்து பார்த்தபோது அதில் செங்கல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட ஆகாஷ் அமேசானில் புகார் அளித்துள்ளார்.




