தேவையான பொருட்கள்
வெங்காயம் – 1, சதுரமாக நறுக்கியது
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கத்தரிக்காய் – 2
சின்ன வெங்காயம் – 10
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிய துண்டு
கடலைமாவு – 2.5 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
கடுகு உளுந்து – 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. குக்கரில் சதுரமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள்தூள் சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து, மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். பின் சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3. சின்ன வெங்காயம் வதங்கியதும் கடலைமாவை சேர்த்து குறைவான சூட்டில் சில நிமிடங்கள் கைவிடாமல் வறுக்கவும். கடலைமாவு வறுபட்ட பின் சாம்பார் பொடியை சேர்த்து பிரட்டி கொள்ளவும்.
4. பின் வேகவைத்த கலவையை லேசாக மசித்து சேர்த்துக் கொள்ளவும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் 1 கப் சூடான தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். சாம்பார் கெட்டியாக இருந்தால் மேலும் 1/2 கப் சூடான தண்ணீர் சேர்த்து கலந்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
5. சாம்பார் நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும். ஈஸியான சுவையான கடலைமாவு சாம்பார் தயார்.




