இதையெல்லாம் அனுபவித்த கடைசி தலைமுறை தான் இது..!! உண்மை..!! படித்துவிட்டு பகிருங்கள்..!!

முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால
ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா…
10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம்.

நம்ம வீட்டை மறந்து உறவு வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வோம்..

பந்தி முதல் பந்தல் வரை சலிக்காம பாப்போம்…

விடிய விடிய பாக்காத உறவுகளுடன் பேசி தூங்காம,கோலமும்,மருதாணியும் வெப்போம்…

வீட்டில் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும்.

பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.
அதுல குழந்தைகளும் பெண்களும்
உறவுக் கதைகளை பேசிட்டிருப்பாங்க.
சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.

பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு,வீட்டுக்கதைகள் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.

சாப்பாட்டு பந்தியில்
வெளியாட்களை பாக்கவே முடியாது.
உறவுகளே பரிமாறினார்கள்.
நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.

பொண்ணு மாப்பிள்ளை போனாலும்
நாம் ஊர் திரும்ப மனசு வராது.
மனசு நெறைய சந்தோசத்துடனும்,
கனத்துடனும் திருப்புவோம்.

இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்தகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.

ஆனா இன்று

இந்த பழக்கம் எங்க போச்சுங்க?….
யார் மாத்துனது? ஏன்?

காலை 6 மணி முகூர்த்தத்துக்கு
7 மணிக்கு போனா போதும்,
பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.
எனக்கு லீவ் இல்ல..
லோன் கட்டனும்…
அவருக்கு ஆபீஸ் மீட்டிங்.
யப்பா எத்தனை காரணங்கள்?!…

இதெல்லாம் போக…
எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ…குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ… அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்,உறவின் புரிதலும்..

இப்போல்லாம்…. பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு…. இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.

இன்றைய கல்யாண வீடுகளில் கூட 1நாள் கூட யாரும் தங்குவதில்லை.
இப்படி இருந்து நீங்க என்ன சாதிச்சீங்க?
உறவுகளை இழந்ததுதான் மிச்சம்.
நாளை உங்கள் சந்ததிகளுக்கு இவைகளுக்கு கூட நேரம் கிடைக்காது.

காக்கா கத்துது…மாமாவும் அத்தையும் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு… வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.

விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது..

ஒன்று மட்டும்…
இன்றைய தலைமுறை அனுபவிக்காத உறவுகளின் மதிப்பை,
அனுபவித்த கடைசி தலைமுறை நாம் என்ற நிலைக்கு உங்கள் குழந்தைகளை கொண்டு வந்து விடாதீர்கள்.

Read Previous

25 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகை..!! யார் தெரியுமா?..

Read Next

தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular