தமிழ்நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடைபெறாததால், பல சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் அரசு அதிகாரிகள் மூலமாக நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கூட்டுறவு சங்க உறுப்பினர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் போலி உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்த உறுப்பினர்களின் பெயர்களை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், இந்த மாதத்திலேயே கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




