சென்னை – தூத்துக்குடி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. பயணிகளுக்கும் மகிழ்ச்சி..!!

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை தாம்பரம் – தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. விடுமுறை காலங்களில் அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேபோல், சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 4, 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு ரயில் சேவை வழங்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதால், பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம்.

Read Previous

இந்த மாதமே கூட்டுறவு சங்கத் தேர்தலா?.. அமைச்சர் காந்தி முக்கிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular