இரவு தூங்கும் முன்பு இத ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்க… எடை கட கடனு குறையும் அதிசயம் நடக்கும்..!!

Oplus_131072

 

ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை நம்மில் பலர் இன்று பின் பற்றி வருகின்றார்கள்.

ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.

ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும்.

குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் எடை குறையும் அதிசயம் மிக வேகமாக நடக்கும்.

எடையைக் குறைக்க எப்படி உதவும்?

நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும்.

உடல் கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்குவதை குறைக்கும், பசியை அடக்கும், செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் கொழுப்பு எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும்.

ஆனால் எக்காரணம் கொண்டும் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது.

இல்லாவிட்டால் அது குமட்டலுக்கு வழிவகுப்பதுடன், பற்களின் எனாமலை அரித்துவிடும்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகளும் எடையை குறைக்க விரும்பினால் மருத்துவ ஆலோசனையுடன் அச்சமின்றி ஆப்பிள் சீடர் வினிகரை இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் எடுத்து கொள்ளலாம்.

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை தொடர்ந்து உட்கொள்வது மிகவும் நல்லது.

இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது இன்சுனில் உணர்திறனை அதிகரிப்பதில் நன்மை பயக்கும்.

குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் குடிப்பது அதிக நன்மை பயக்கும்.

நல்ல தூக்கம் கிடைக்கும் :

தூக்கமின்மை பிரச்சனையானது உடல் பருமன் மற்றும் எரிச்சல் போன்வற்றிற்கு வழிவகுக்கும். ஆனால் இரவு தூங்கும் முன் ஆப்பிள் சீடர் வினிகரைக் குடித்தால், இரவு நேரத்தில் 7-8 மணிநேரம் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெறலாம்.

எனவே இனி தூங்கும் முன்பு ஆப்பிள் சீடர் வினிகரை பருகுங்கள்.

Read Previous

இரவு உணவுக்குப் பின் இத மட்டும் செய்யுங்க உடல் எடை குறைவதை நீங்களே கண்கூட பார்க்கிறீர்கள்..!!

Read Next

முளைகட்டிய தானியங்களை சாப்பிடச்சொல்வது ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular