நாம் அனைவரும் நமது முடி கருகருவென நீளமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவோம். ஆனால் இங்கு பலருக்கு முடி வேகமாக வளர்வதே அசாத்தியமாக இருக்கிறது. அப்படி முடியை கருவேப்பிலை கிராம்பு மட்டும் வைத்து அதிகமாக வளர என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம்.
பொதுவாக கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி நன்கு கருப்பாக வளரும் என்று நமக்கு தெரியும். அதற்காக நிறைய பேர் தினமும் கருவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வருகிறார்கள். இதனுடன் நாம் கிராம்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் ஒரு கைப்பிடி அல்லது உங்களின் கூந்தலின் அளவு படி கருவேப்பிலையை எடுத்துப் போட வேண்டும்.
அதில் 10 முதல் 12 கிராம்பு துண்டுகளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்தக் கருவேப்பிலை மற்றும் கிராம்பின் வாசனை நன்கு நமக்கு வெளிவரும். அதில் தண்ணீர் நிறம் மாறும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் நிறம் மாறியதும் இறக்கி விட வேண்டும். இந்த நீரை தலை முழுவதும் தடவி வந்தால் முடி மிக வேகமாக வளரும். இதனை நீங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்ய வேண்டும். மேலும் தலையில் தடவி ஷாம்பு போட்டு குளிக்க கூடாது. அப்படி செய்தால் பலன் அளிக்காமல் போய்விடும்.




