நம் அனைவருக்கும் நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக தினமும் வீட்டை சுத்தம் செய்ய முடியாது. அந்தப் பொருட்களை நாம் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ மட்டும் சுத்தம் செய்தே இயற்கை முறையில் பளபளக்க வைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்.
உங்கள் வீட்டில் துருப்பிடித்து இருக்கும் பொருட்களில் உள்ள துருக்களை அகற்ற உருளைக்கிழங்கு கொண்டு தேய்த்தால் போதும். நமது வீட்டில் இருக்கும் பாத்திரங்களில் இருக்கும் கருமைதான் நம்மை அதிகமாக முகம் சுளிக்க வைக்கிறது. எவ்வளவு சுத்தம் செய்தாலும் அது விடாது. அந்தக் கருமையை நீக்க இதை செய்து பாருங்கள்.
உங்கள் பாத்திரத்தில் இருக்கும் கருமையை நீக்க காபித்தூளை வைத்து சுத்தம் செய்யலாம். அதேபோல உங்கள் ஜன்னல்களில் இருக்கும் எண்ணெய் பசை தன்மையை நீக்க வெங்காயம் கொண்டு துடைத்து எடுக்கவும். மேலும் உங்கள் பாத்திரம் கழுவும் தொட்டியில் இருக்கும் அழுக்கை நீக்க எலுமிச்சை பழம் கொண்டு அதனை சுத்தம் செய்தால் போதும்.



