உங்கள் வீட்டில் காய்கறிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை..!! இதை செய்து அசத்துங்கள்..!!

தினமும் நமது தாய்மார்கள் காய்கறிகளை வைத்து சாதத்திற்கு குழம்பு வைப்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒரு சில நாள் வீட்டில் காய்கறிகள் இல்லாமல் போய்விடும். அப்படி இருக்க மல்லி குழம்பை நீங்கள் வீட்டில் செய்து பாருங்கள். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் மிகவும் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி விதை – 5 ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 8,

மிளகு – ஒரு ஸ்பூன்,

சீரகம் – ஒரு ஸ்பூன்,

பூண்டு – 10 பல்,

கறிவேப்பில்லை, கொத்தமல்லி – சிறிதளவு,

வெந்தயம் – சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு,

நல்லெண்ணெய் – தேவையான அளவு,

கடுகு – சிறிதளவு.

செய்முறை:

ஒரு கடாயை எடுத்து எண்ணெய் விட்டு கொத்தமல்லி காய்ந்த மிளகாய் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இது ஆறியதும் ஜாரில் நன்றாக அரைத்து அதனுடன் புளியை ஒரு பெரிய லெமன் வடிவுக்கு எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும். புளியை மசாலாவுடன் சேர்த்து அரைக்கவும்.

கடாய் எடுத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம், மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து கிளறவும். மிளகாய் தூள் அரை ஸ்பூன் சேர்த்து உப்பு தேவையான அளவு போட்டுவிட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

என்னை தனியாக பிரிந்து வரும்வரை வேக விடவும். கடைசியாக வெள்ளத்தை சிறிது போட்டு கிளறி கொத்தமல்லி தலையை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிம்பிளான மல்லி குழம்பு தயார்.

Read Previous

கொய்யா பழத்தை தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!! மக்களே கட்டாயம் படியுங்கள்..!!

Read Next

“அவரை வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள்”..!! மதுரையை அதிர வைத்த தளபதி விஜய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular