உடலுக்கு நன்மைகள் சேர்க்கும் சுரைக்காய் வடை..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

நம் அனைவருக்கும் வடை என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த வடையையும் நம்மால் சத்தானதாக மாற்றி கொடுக்க முடியும். அப்படி இன்று உடல் சூட்டை குறைக்க உதவும் சுரைக்காயை வைத்து வடை எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்: 

சுரைக்காய் துருவியது-1 கப்,

அரிசி மாவு-1 கப்,

பச்சை மிளகாய் – 3,

வெங்காயம்- 2,

மிளகு சீரகம்- ஒரு ஸ்பூன்,

உப்பு- தேவையான அளவு,

கறிவேப்பில்லை- சிறிதளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தை எடுத்து சுரைக்காயை துருவி வெள்ளை துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அரிசி மாவை அதில் சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பிசைந்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி பொன்னிறமாகும் வரை பொறுக்க விட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான சுரக்காய் வடை தயார்.

Read Previous

உங்களுக்கு ஆட்டுத்தலை கறி பிடிக்குமா..!! அதில் உண்மையிலேயே நன்மை இருக்கிறதா..!!

Read Next

விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்துப் பாருங்கள்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular