விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் செய்து கொடுக்க வேண்டும் என்று தாய்மார்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். அப்படி இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சேமியாவை வைத்து தயிர் சாதம் எப்படி செய்வது என்று தெளிவாக காண்போம்.
பச்சை மிளகாய் கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதித்த பிறகு உப்பு மற்றும் எண்ணெய் விட்டு சேமியாவை அதில் போடவும்.
சேமியா வெந்த பிறகு அதை வடித்து எடுத்து விடவும். குளிர்ந்த நீரில் அதை அலசினால் உதிரியாக கிடைக்கும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தயிரை சேர்த்துக் கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தை எடுத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு உளுந்து வர மிளகாய் பெருங்காயத்தூள் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்த அந்த தயிரில் ஊத்தவும்.
ஜாரில் முந்திரி தேங்காயை சேர்த்து அரைத்து தயிரில் போடவும். பின்பு அந்த வேக வைத்த சேமியாவையும் இதில் சேர்க்கவும். சிறிது மாதுளை பழத்தையும் கொத்தமல்லி தலையையும் தூவவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான தயிர் சேமியா தயார்.



