கடந்த சில நாட்களாக இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளே பரபரப்பாக இருப்பதற்கு காரணம் இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 28 பேருக்கும் மேற்பட்டோரை பஹல்காமில் கொன்று குவித்தனர். இதற்குப் பிறகு இந்தியாவில் இருக்கும் அனைவரும் இதற்கு அந்த பயங்கரவாதிகள் பதில் கூற வேண்டும் என்று போராடி வந்தனர்.
இது நடந்ததற்கு பிறகு இந்தியாவிற்கும் இந்த பயங்கரவாதிகளுக்கும் போர் நடக்கும் என்று நாம் அனைவரும் நினைத்தோம். ஆனால் இப்போது அது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் போர் நடப்பதாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் குறி பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடும் சில நபர்களின் மீது மட்டும்தான். சாதாரண குடிமக்களின் மீது கிடையாது.
ஆனால் பாகிஸ்தான் எல்லைகளில் ராணுவ படைகளை நிப்பாட்டி இந்த போரை இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள போறாக மாற்றிவிட்டது. இந்தியாவின் குறி பயங்கரவாதிகளின் மேல் இருக்க பாகிஸ்தான் ராணுவங்களை தயார் செய்தது பெரும் கேள்வியை உண்டாக்கியது. அந்த வகையில் பாகிஸ்தானின் ஒரு முக்கிய புள்ளி இன்று, பாகிஸ்தான் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு உடன் இருந்ததாகவும் ஒரு ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளார்.
இவையெல்லாம் வைத்து பார்க்கின்ற பொழுது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இத்தனை காலமாக உதவி செய்து வந்தது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் இதுவரை நடந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பாகிஸ்தான் உடன் இருந்திருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு தங்களது அனுதாபங்களையும் இந்தியாவிற்கு கை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.




