ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள கோயிலுக்கு பெண் பத்திரிகையாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் கழிப்பறையை பயன்படுத்தச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர், அப்பெண்ணிடம் ரூ.800 வசூலித்ததாக அப்பெண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது வயதான தாயுடன் தரிசனத்திற்காக சென்றதாக கூறிய அப்பெண், கோயிலுக்கு அருகில் கழிப்பறை இல்லை என்பதால் ஹோட்டலுக்கு சென்றதாக கூறியுள்ளார்.




