இதய நல மருத்துவர்கள் பாமாயில் எண்ணெயில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், வீதி தோறும் விற்கும் உணவு கடைகளில் தாயாரிக்கப்படும் துரித உணவுகளில் பாமாயில் அதிகம் கலக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்குகளிலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இப்படி நாம் சாப்பிடும் பல உணவுகளில் நமக்கு தெரியமலையே இந்த என்னை கலக்கப்படுகிறது. மேலும் இதை தொடந்து சாப்பிட்டால் இதயத்தில் தமனிகள் மூடிக்கொள்ளும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பெரும் அளவில், கல்லூரி மற்றும் பள்ளி கேன்டீன்களில் தயாரிக்கப்படும் போண்டா, வடை மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுகளில் பாமாயில் கலக்கப்படுகிறது.
50 சதவீதம் பாமாயிலில் கொழுப்புகள் உள்ளது. இவை, குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோடீன் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். அதுமட்டுமில்லாமல், இந்த கெட்ட கொழுப்பு ட்ரைகிளிசரைட்களை அதிகரிக்கிறது. இதனால், மாரடைப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது.
இதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இருந்தாலும் அளவையை தாண்டி எந்த எண்ணையாயினும் உபயோகிக்க கூடாது.
இல்லையேல் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் அதிகரிக்கும், மேலும் அதுனால் உடல் எடை அதிகமாகும், இருதியில் அது மாரடைப்பு போன்ற நோய்களுக்கு வலி வகுக்கும். எனவே மருத்துவர்கள் இதை கண்டு தள்ளி விலக சொல்கின்றனர்.




