என்னிடம் அதிகம் நெருங்காதே.. நான் கொஞ்சம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வேன்..!! படித்ததில் பிடித்த வரிகள்..!!

என்னிடம் அதிகம் நெருங்காதே….🙂🧡
நான் கொஞ்சம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வேன்.😌🧡

என்னை சுற்றியே உன் கண்கள் இருக்க வேண்டுமென்பேன்.

என்னை பற்றியே உன் பேச்சுக்கள் இருக்க வேண்டுமென்பேன்.

கவனித்தால் இது போதாதென்பேன்.😝🧡✨
கவனிக்க தவறினால் நான் அலுத்து விட்டேனா என்பேன்.😏🧡🚶🏻‍♀️

ஆதலால்
என்னிடம் அதிகம் நெருங்காதே….😌🧡✨
நான் கொஞ்சம்
அதிகம் உரிமை எடுத்துக்கொள்வேன்.🤗🧡✨

உரிமை எடுத்தால்
அதன் பின் நீதான்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விநாடியும் வதைக்கப்படுவாய்..🙃🧡✨

பிரியத்தால் நெருக்கடிக்கு ஆளாவாய்..🧡✨
அக்கறையால் அச்சமடைவாய்..
அத்தனையும் அதீதம் என்று அலறுவாய்..
திகட்டும்,
முழுங்கவும் முடியாமல்
உமிழவும் முடியாமல்
கலங்குவாய்..

எதெல்லாம் பிடித்து போய் வந்தாயோ
அதெல்லாம் பிடிக்காமல் போகலாம்.🚶🏻‍♀️🚶🏻‍♀️
எதெல்லாம் பிடிக்கவில்லை என்று பிதற்றினாயோ
அதெல்லாம் பிடித்து விடலாம்.😄🧡✨

ஏன் இவளை விரும்பி தொலைத்தோம் என்று பின்னாளில் நீயே இடித்துக்கொள்வாய்..

ஆதலால்
என்னிடம் அதிகம் நெருங்காதே..☺️🧡✨
நான் கொஞ்சம்
அதிகம் உரிமை எடுத்துக்கொள்வேன்.😒🧡✨

நான் உன்னை ‘தாங்க’ ஆரம்பித்தால்
நான் அன்பினை செலுத்த ஆரம்பித்தால்
மகிழ்வை விட சொர்க்கத்திற்கும் உன்னை
அழைத்து செல்வேன்.🥰🧡

ஈடு கொடுக்க முடியாமல் திணறுவாய்.😅🧡✨

உன்னை பிடித்த அளவுக்கு
உன் செயலும்
உன் வார்த்தையும்
உன் அசைவும்
உன் குரலும்
ஏன்
உன் நிழலும்
கூட பிடித்துவிடும்.

அதில் ஊறி
அதிகம் உரிமைகள் எடுத்துக்கொள்வேன்.😊🧡✨

ஆதலால்
என்னிடம் அதிகம் நெருங்காதே…

Read Previous

சத்தான உணவு இலைகள்..!! தினமும் சாப்பிடுங்கள்..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!!

Read Next

நெய் நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 16 வகையான பலன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular