எம்புரான் படத்திற்கு ஒரு புதிய சிக்கல்..!! தடை செய்ய சொல்லும் மதிமுக தலைவர் வைக்கோ..!!

கடந்த வாரம் மலையாள திரை உலகில் இருந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் வெளியிடப்பட்டது. இதில் பிரித்விராஜ் சுகுமார் இயக்கி மோகன்லால் நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனமே பெற்று வருகிறது. இப்பொழுது இந்த படத்திற்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு வைகோ அவர்கள் எம்புரான் படத்தை தடை செய்ய சொல்லி வலியுறுத்துகிறார். இந்தத் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான தகவல்கள் வந்து இருப்பதாக கூறி அவர் குற்றம் சாட்டுகின்றார்.

அதாவது அந்த திரைப்படத்தில் முல்லைப் பெரியார் அணைக்கு அருகில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த வெடிகுண்டு வெடித்தால் கேரளா எப்போது வேண்டுமானாலும் நீருக்குள் மூழ்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் பயத்தை உண்டாக்கும் வசனங்களாக கருதப்படுகிறது. இதன் காரணமாக திரு வைகோ அவர்கள் இந்த படத்தை தடை செய்ய சொல்லி வலியுறுத்தி வருகிறார். இது மட்டுமில்லாமல் முன்னதாக வேல்முருகன் அவர்களும் இந்த படத்தை தடை செய்யுமாறு கூறி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Read Previous

தாய்லாந்து செல்லும் இந்திய பிரதமர்..!! அவர் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்..!!

Read Next

பழைய கண்ணோட்டங்களை மாற்றி புதியதொரு கண்ணோட்டங்களை கொடுத்த திரைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular