திரைப்படம் என்பது நமது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சோகங்களையும் துன்பங்களையும் மறந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நிம்மதியாக உட்கார்ந்து ஒரு புதிய உலகிற்கு நம்மை கூட்டி செல்லும் ஒரு கருவியாகும். இந்தத் திரைப்படங்கள் பல காலமாக இருந்து வருகிறது. ஆனால் இத்தனை காலமாக ஒரே விஷயத்தை தான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
அதாவது எப்போதும் ஒரு கதாநாயகன் நல்லவனாக தான் இருந்து வருவான் என மக்களிடம் ஒரு ஆழ்ந்த சிந்தனையை விதைத்துள்ளது. ஆனால் கடந்த சில காலமாக வரும் திரைப்படங்கள் புது புது ஃபார்முலா கலை கொண்டு பல விஷயங்களை மாற்றி வெற்றியும் பெற்று வருகிறது. அப்படி புது கண்ணோட்டத்துடன் வந்து வெற்றியும் அடைந்த திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
முன்பு கூறியது போல் கதாநாயகன் என்றாலே நல்லவன் என்ற கண்ணோட்டத்தை மாற்றி ஒரு புதிய கண்ணோட்டத்தை கொடுத்த படம் “சூது கவ்வும்”.
காதல் தோல்வி என்றாலே குடி போதை தாடி வளர்த்து சாலையில் சுற்றுவது என்று சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில் காதல் தோல்வி அடைந்த பின்னும் எதார்த்தமான வாழ்க்கையை காட்டிய ஒரு படம் “அட்டகத்தி”.
மேலும் பேய் என்றாலே அந்த பேயை கெட்டதாகவே காமித்து ஒரு ராட்சசனை போல் சித்தரிக்கப்பட்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு பேயை தேவதையை போன்று சித்தரித்து அதை மக்களிடம் வரவேற்பையும் பெற வைத்து கலக்கிய இயக்குனர் திரு மிஸ்கினின் படம் தான் “பிசாசு”.
இப்படி புதிதான கண்ணோட்டங்களை வரவேற்கும் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த மாதிரியான திரைப்படங்கள் ஒரு ஃபுல்மீல்சை போன்று அமையும். மேலும் இந்த மாதிரி திரைப்படங்கள் வந்தால் மக்கள் அதை ஆதரித்து தான் தீர்வார்கள்.




